1. Home
  2. தமிழ்நாடு

சாம்சங் ஊழியர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்தது..! வாகன ஓட்டுநர் வலுக்கட்டாயமாக ஏற்றி சென்றாரா ?

1

இன்று காலையில் சாம்சங் நிறுவன ஊழியர்கள் வந்த வாகனம் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

கடந்த 30 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் இன்று காலை தொழிற்சாலை அமைந்துள்ள சுங்குவார்சத்திரம் பகுதி அருகே நடந்து வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக மினி சரக்கு வாகனத்தின் டிரைவர், அந்த வழியாகத்தான் செல்கிறேன். நீங்கள் வேண்டும் என்றால் வண்டியில் வாருங்கள் என்று கேட்டுள்ளார். நடந்து வந்ததால், செல்லும் வழிதானே என்று நினைத்து ஊழியர்கள் 13 பேர் அந்த வாகனத்தில் ஏறியுள்ளனர். மினி சரக்கு வாகனத்தின் பின்பக்கம் தொழிலாளர்கள் ஏறியுள்ளனர். வாகனம் சென்று கொண்டிருந்த போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி இடதுபுறமாக வந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சாம்சங் நிறுவன ஊழியர்கள் காயம் அடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீபெரும்பதூர் அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் வாகனம் விபத்துக்குள்ளானது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விபத்து குறித்து சுங்குவர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சரக்கு வாகனத்தின் டிரைவர் வலுக்கட்டாயமாக சாம்சங்க் ஊழியர்களை வாகனத்தில் வருமாறு கூறி அழைத்து சென்றதாகவும், வாகனத்தை தாறுமாறாக இயக்கியதாகவும் சொல்லப்படுகிறது.


 


 

Trending News

Latest News

You May Like