பட்டியலின சிறுவன் கோவிலில் சாமி கும்பிட்டதால் , துப்பாக்கியால் சுட்டு கொன்ற ஜாதி வெறி கும்பல் !!

பட்டியலின சிறுவன் கோவிலில் சாமி கும்பிட்டதால் , துப்பாக்கியால் சுட்டு கொன்ற ஜாதி வெறி கும்பல் !!

பட்டியலின சிறுவன் கோவிலில் சாமி கும்பிட்டதால் , துப்பாக்கியால் சுட்டு கொன்ற ஜாதி வெறி கும்பல் !!
X

உத்தரபிரதேசம் , அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள தொம்கேரா கிராமத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவரது மகன் விகாஷ் குமார் ஜாதவ் (17).  கடந்த 1 ம் தேதி சிவன் கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட முயன்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த மற்ற சமூகத்தினர் விகாஷை தடுத்துள்ளனர் அதையும் மீறி விகாஷ் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்துள்ளார். இதைப்பார்த்த மற்றவர்கள் சிறுவனை தாக்கியுள்ளனர். இதுபற்றி விகாஷின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்பு விகாஷின் வீட்டுக்குள் புகுந்த நான்கு இளைஞர்கள் , விகாஷை தரதரவென இழுத்துச் சென்றதுடன் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே விகாஷ் பரிதாபமாக உயிரிழக்க குற்றவாளிகள் தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கொலைக்கு காரணமான ஜாதி வெறிபிடித்த மனித மிருகங்களுக்கு கடுமையான தண்டனையாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கொந்தளிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Newstm.in

Next Story
Share it