சானியா மிர்சாவை பார்க்க முடியாமல் வேதனை.. சிறப்பு அனுமதி பெற்ற கணவர் மாலிக் !

சானியா மிர்சாவை பார்க்க முடியாமல் வேதனை.. சிறப்பு அனுமதி பெற்ற கணவர் மாலிக் !

சானியா மிர்சாவை பார்க்க முடியாமல் வேதனை.. சிறப்பு அனுமதி பெற்ற கணவர் மாலிக் !
X

கொரோனா ஊரடங்கு காரணமாக 5 மாதங்களாய் தன் மனைவி சானியா மிர்சாவைச் சந்திக்க முடியாததால் சோயிப் மாலிக்கிற்கு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இந்தியாவின் டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சாவை திருமணம்  செய்து உள்ளார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. மாலிக் பாகிஸ்தானில் வசிப்பதால் இருவரும்  அதிக நேரம் செலவிட முடியவில்லை. 

தற்போது சோயிப் மாலிக் அவரது நாட்டில் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தார். சானியா மிர்சா சர்வதேச  டென்னிஸ் தொடரை முடித்துவிட்டு மகனுடன் இந்தியாவில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் கொரோனோ பரவலால் இரு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கணவன் -மனைவி இருவரும் கடந்த 5 மாதங்களாக சந்திக்க முடியாமல் போனது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள பாகிஸ்தான் அணி  வரும் 28ஆம் தேதி சிறப்பு விமானம் மூலம் புறப்படவுள்ளது. 29 நபர்கள் கொண்ட அணியில் சோயப் மாலிக் இடம்பிடித்துள்ளார்.

இருப்பினும் கடந்த 5 மாதங்களாகத் தனது குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பதால் எனது மனைவியையும், மகனையும் சந்திக்க சிறப்பு அனுமதி கோரியுள்ளார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் சோயிப் மாலிக் இந்தியா வந்து தனது மனைவியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in 

Next Story
Share it