இன்று சென்னையில் சமத்துவ பொங்கல் – துணை முதல்வர் பங்கேற்பு!

நந்தம்பாக்கம் பர்மா காலனியில் சமத்துவ பொங்கல் விழா இன்று 13-ந் தேதி மாலை 5 மணியளவில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெறுகிறது.
அவைத் தலைவர் துரைசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி, எம்.எல்.ஏ, வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் விஸ்வநான் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பகுதி செயலாளர் குணாளன் வரவேற்றுப் பேசுகிறார்.
விழாவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களுடன் இணைந்து கலை நிகழ்ச்சி களை பார்வையிட்டுச் சமத்துவப் பொங்கலிடுகிறார்.
இவ்விழாவில் 1000 ஏழை எளியவர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கிச் சிறப்புரையாற்றுகிறார்.
இதில் தி.மு.க. பொருளா ளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் மீ.அ.வைதியலிங்கம், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணா நிதி, வரலட்சுமி மதுசூதனன், முன்னாள் சட்டமன்ற உறுப் பினர்கள் வீ.தமிழ்மணி, இதயவர்மன், மாவட்ட ஊராட்சி தலைவர், குன்றத் தூர் ஒன்றிய செயலாளர், படப்பைமனோகரன், தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ்.
பகுதி செயலாளர்கள்-என்.சந்திரன், பம்மல் வே.கருணாநிதி, இ.ஜோசப் அண்ணா துரை, த.ஜெயக் குமார், மூவரசம்பட்டு சதீஷ், மு.ரஞ்சன், தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அ.தமிழ்மாறன் உள்பட பலர் பங்கேற்றனர்.