கொரோனா சிகிச்சைக்கான மருந்து என்று போலி மருந்து விற்பனை !! 3 வகையான ஆன்டி வைரஸ் மருந்து பொருட்கள் பறிமுதல்

X

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில்  தென் மண்டலம் அதிரடிப்படை போலீசார் உள்ளூர் போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது சர்வதேச அளவில் மருத்துவ மாஃபியா போன்று கள்ளச்சந்தையில் கொரோனா சிகிச்சையான மருந்தை ஒரு கும்பல் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து சேசுன்தேரபத்தை சேர்ந்த வெங்கட சுப்பிரமணியம் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள கொரோனா சிகிச்சைக்கான மிக முக்கிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

3 வகையான ஆன்டி வைரஸ் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கைதானவர்களிடம் இருந்து கொரோனா தொற்று உள்ளதா என கண்டறியும் ரேபிட் கிட் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பல் ரூ.4,500 மதிப்புள்ள ஊசி ஒன்றை ரூ. 40,000க்கும், ரூ.10,000 மதிப்புள்ள மருந்துகளை ரூ.50,000க்கும் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

Newstm.in

Next Story
Share it