1. Home
  2. தமிழ்நாடு

ஷீரடிக்கு சாய்பாபாவின் முதல் விஜயம்

ஷீரடிக்கு சாய்பாபாவின் முதல் விஜயம்

“தர்மம் அழிந்தது அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம் என்னை நானே அவதரித்தது கொள்கிறேன். நல்லோரை காத்து தீயோரை அழிக்க யுகந்தோரும் அவதாரிக்கிறேன்” என்று பகவத் கீதையில் “கண்ணபிரான்” கூறுகிறார். இதுவே ,பகவானின் அவதார நோக்கம்.

பகவானின் சார்பாக ரிஷிகளும், ஞானிகளும் இப்பூவுலகில் தக்க தருணத்தில் தோன்றி அவதார நோக்கம் நிறைவேருமுகமாகத் தமக்ககே உரிதான முறையில் உதவி செய்கிறார்கள். உதாரணமாக இரு முறை பிறப்பவர்கள் பிராமணர்கள், ௯ஷத்திரியர்கள்,வைசியர்கள். தங்கள் கடமைகளைப் புறக் கணிக்கும் போதும், மேற்குளதவரின் உரிமைகளைத் தவறான முறையில் பறிக்கச் சூத்திரர்கள் முயலும் போதும், ஆன்மஞான போதகர்கள் மதிக்கப்படாமல் அவமதிக்கப்படும்போதும் , தன்னைத் தான் (ஒவ்வொருவனும்) மெத்தப்படித்தவன் என்று எண்ணும்போதும், தடுக்கப்பட்ட ஆகாராதிகளையும், போதை தரும் குடிப்பொருளையும் ஜனங்கள் உட்கொள்ளும் பொழுதும் , மதமென்னும் போர்வையினுள் மக்கள் தகாத காரியங்களைச் செய்யும் போதும் ,பல்வேறு இனத்து மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் போதும், மறையவர் சந்தியாவந்தனம், மற்றும் தங்கள் மதப் பழக்க வழக்கங்களைச் செய்யத் தவறும் போதும், யோகிகள் தியானத்ததைப் புறக்கணிக்கும் போதும், மனைவி, மக்கள் செல்வமே, தங்கள்கருத்துக்குரிய ஒன்றே ஒன்று என்று மக்கள் கருதத் தலைப்பட்டு முக்தி என்னும் உண்மை நெறியின்று வழி தவறிப்போகும் பொழுதும், ஞானிகள் தோன்றவே செய்கிறார்கள்.

தங்கள் மொழி, செயல் வழிகளால் காரியங்களை நெறிப்படுத்துகிறார்கள். அவர்கள் கலங்கரை விளக்கையொப்ப சேவை செய்து நமக்கு மெய்நெறியைக் காண்பிக்கிறார்கள். இவ்வாறாகப் பல ஞானிகள் நிவ்ருத்தி, ஞானதேவ், முக்தாபாய், நாமதேவ், கோரா, கோனாயி, ஏகநாத், துக்காராம், நரஹரி, நர்ஸிபாயி, ஸஜன்கஸாயி, ஸவதா, ராமதாஸ் மற்றும் பலர் பற்பல காலங்களில் மக்களுக்கு மெய் நெறியைக் காண்பிக்கத் தோன்றவே செய்தனர். இவ்வகையில் இறுதியாக ஷீரடி சாய்பாபாவும் விஜயம் செய்தார்.


ஷீரடி ஒரு புண்ணிய தீர்த்தம்: “அஹமத்நகர ஜில்லாவில்” உள்ள கோதவரி ஆற்றங்ரை மிகவும் அதிருஷ்டம் படைத்ததாகும். ஏனெனில், அனேக ஞானிகளை ஈன்று புரந்தும். அடைக்கலம் கொடுத்தும் இருக்கிறது. அவர்களுள் முக்கியமானவர் “ஞானேச்வர்”, ஷீர்டியும், அஹமத்நகர ஜில்லாவில் உள்ள கோபர்காங்வ் தாலுக்காவில்தான் இ்ருக்கிறது. கோபார்காங்வில் உள்ள கோதாவரி ஆற்றைக் கடந்தவுடன் ஷீரடிக்குள்ள வழியை காணலாம்.. ஓன்பது மைல்கள் சென்றதும் “நிம்காங்வ்” என்ற இடம் உள்ளது.. அவ்விடத்தினின்று ஷீரடி தெரிகிறது.
ஓம் ஸ்ரீ சாய்ராம்!!!!

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்

newstm.in

Trending News

Latest News

You May Like