பாலிமர் சேனல் குறித்து பரவும் வதந்தி!

பாலிமர் சேனல் குறித்து பரவும் வதந்தி!

பாலிமர் சேனல் குறித்து பரவும் வதந்தி!
X

சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் வேலைப் பார்த்து வந்த ஊழியர்கள் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த தனியார் சேனலில், பிரேக்கிங் செய்தி ஆசிரியருக்கு கொரோனோ தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருடன் தங்கியிருந்த 4 பேருக்கும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 2 பேர் நிருபர்கள் என்றும் மேலும் பலருக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக பிரபல நாளிதழ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 24 வயது பத்திரிகையாளருக்கும், பிரபல தொலைக்காட்சி சேனலில் பணியாற்றி வரும் ராயபுரத்தில் தங்கியிருந்த உதவி ஆசிரியருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த குறிப்பிட்ட சேனல் பாலிமர் தொலைக்காட்சி  என்று சில இணையதளங்களில் தவறான செய்தி வேகமாகப் பரவி வருகிறது.  வாசகர்களின் தெளிவுக்காக, பாலிமர் சேனல் நன்றாகவே இயங்கி வருகிறது. இந்த வதந்தியை நம்ப வேண்டாம்.

Next Story
Share it