இளம் நடிகர் உயிரோடு இருக்கும்போதே  இறந்துவிட்டதாக பரவிய வதந்தி!!!

இளம் நடிகர் உயிரோடு இருக்கும்போதே  இறந்துவிட்டதாக பரவிய வதந்தி!!!

இளம் நடிகர் உயிரோடு இருக்கும்போதே  இறந்துவிட்டதாக பரவிய வதந்தி!!!
X

கொரோனா பெருந்தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கைகள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. 

இந்நிலையில், திரையுலகில் எதிர்பாராத மரணங்கள் தற்கொலைகள் ஏற்பட்டு வரும் நிலையில், இது போன்ற சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், இதன் நடுவே, அவ்வப்போது, தவறான செய்திகளும் உலா வந்த வண்ணம் உள்ளது. அண்மையில், பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி மரணித்துவிட்டதாக செய்திகள் வெளியானது. 

அதனை தொடர்ந்து, இவை அனைத்தும் பொய்யானவை என வருத்தம் தெரிவித்திருந்தார் பாடகி எஸ். ஜானகி. இதே போன்று, ஒரு நிகழ்வு தற்போது பாலிவுட்டிலும் அரங்கேறியுள்ளது.

நெட்பிளிக்ஸில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் புல்புல் பட நடிகர் அவினாஷ் திவாரி இறந்து விட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

இதற்கு, நடிகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அவ்ளோ சீக்கிரம் மாட்டேன்” என கூறி அந்த செய்தியை மறுத்துள்ளார்.

newstm.in

Next Story
Share it