1. Home
  2. தமிழ்நாடு

பாழாய் போன அரசியல்வாதிகள்! சாதித்துக் காட்டிய மாணவிகள்!

பாழாய் போன அரசியல்வாதிகள்! சாதித்துக் காட்டிய மாணவிகள்!

ராஜஸ்தான் மாநிலத்தில் திறந்தநிலைப் பள்ளிகளின் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அவ்வளவு எளிதாக கடந்து போய்விடமுடியாது. அங்குள்ள பத்லா கிராமத்தில் மாணவர்கள் ஒருவர்கூட பள்ளியில் சேரவில்லை என்பதால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கிராமத்தில் இருந்த அனைத்து அரசுப் பள்ளிகளும் மூடப்பட்டன. அதையும் தாண்டி, அக்கிராமத்திலேயே முதன்முறையாக பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் என்றால் அது இந்த மூன்று மாணவர்கள்தான். அமிரா, வச்சி மற்றும் ஹிரா பானு என இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கனின் வெற்றியை கிராம மக்கள் கொண்டாடினர்.

இதனை வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை இனிப்புகள் வழங்கி, மாணவிகளுக்கு மாலை அணிவித்து, விழாவைப்போல கொண்டாடினர். 17 வயது அமிரா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றிபெறுவது கடினமாக இருந்தது. கற்றல் நிலையத்தில் இணைந்து கல்வி பயில்வதற்கு முன்புவரை என்னுடைய பெயரை எழுதுவதுகூட எனக்குக் கடினமாக இருந்தது. நான் எப்படிப் படிப்பேன்... இங்கு பள்ளிகள் இல்லை. ஒருவர் கல்வியை வாங்கவோ பிச்சை எடுக்கவோ முடியாது எனக்கூறிய அவர் பலோடி நகரில் உள்ள கல்லூரியில் படித்து மருத்துவராக வேண்டும் என தனது லட்சியத்தை கூறினார்.

செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் என தொழில்நுட்பத் துறை வளர்ச்சியோடு கல்வித்துறையும் செயல்படும்போது, அடிப்படைக் கல்விக்கே பத்லா கிராமம் சிரமம்படுகிறது. இந்ந நிலையில், பத்லா கிராமத்தின் வரலாற்றிலேயே மூன்று மாணவிகள் முதன்முறையாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கும் செய்தி பலரையும் நெகிழச்செய்துள்ளது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like