ருத்ரேஸ்வரா கோயிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு..!!

ருத்ரேஸ்வரா கோயிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு..!!

ருத்ரேஸ்வரா கோயிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு..!!
X

தெலுங்கானா மாநிலத்தின் முளுகு மாவட்டத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ருத்ரேஸ்வரா (ராமப்பா) கோயிலை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தனது ட்விட்டர் தளத்தில் யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது.

இதன் மூலம், இந்தியாவின் 39வது உலக பாரம்பரிய சின்னமாகி உள்ளது இந்தக் கோயில். 12 மற்றும் 13வது நூற்றாண்டில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 40 ஆண்டு காலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்றது.

முன்னதாக, இந்தியாவின் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள கோயில்கள், வாரணாசியில் உள்ள கங்கை நதிக்கரை படித்துறை, சத்புரா புலிகள் காப்பகம் மாதிரியானவை இந்த உலக பாரம்பரிய சின்னத்திற்கான உத்தேச பட்டியலில் இடம் பெற்றிருந்தன.

யுனெஸ்கோவின் இந்த அறிவிப்புக்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அருமை! அனைவருக்கும், குறிப்பாக தெலுங்கானா மக்களுக்கு வாழ்த்துகள். ராமப்பா கோயில் பெரிய காகதிய வம்சத்தின் சிறப்பான கட்டடக்கலைக்கு சான்றாக உள்ளது. இந்த கம்பீரமான கோயில் வளாகத்தை பார்வையிடவும், அதன் மகத்துவத்தின் முதல் அனுபவத்தைப் பெறவும் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Tags:
Next Story
Share it