வீடு புகுந்து ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரின் தந்தை படுகொலை!!

 | 

தஞ்சாவூர், கும்பகோணத்தில், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரின் தந்தையை, மர்ம நபர்கள், நேற்று வெட்டிப் படுகொலை செய்தனர்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்துள்ள நாச்சியார் கோவில் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் கோபாலன். 67வயதான இவர், ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 
கோபாலன், நேற்று இரவு, 7 மணியளவில், வீட்டில் இருந்த பொழுது, அவருடைய வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்து, கோபாலனை அடுத்தடுத்து அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றனர். 
பலத்த அரிவாள் வெட்டுக்காயங்களுடன், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபாலன், சிறிது நேரத்தில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். நாச்சியார்கோவில் போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கோபாலனின் மகன் வாசுதேவன், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், மண்டல பொறுப்பாளராக இருந்தவர் என்பதும், சமீபத்தில் சிஏ.ஏ.வுக்கு ஆதரவாக போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP