குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை – முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், செப்டம்பர் முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இதற்காக ரூ. 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 7) ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இந்த ஆலோசனை கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு காணொளி மூலமாக நடைபெறும் எனவும், இதில் இந்த திட்டத்தை செல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்டஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொள்கின்றனர்.மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இந்த ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.