59,000 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை.. ஆணையா் கோ.பிரகாஷ் தகவல்

59,000 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை.. ஆணையா் கோ.பிரகாஷ் தகவல்

59,000 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை.. ஆணையா் கோ.பிரகாஷ் தகவல்
X

தமிழகத்தில் கொரோனா காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால், பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்க முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அடையாறு மண்டலத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கிய பின் ஆணையா் கோ.பிரகாஷ் செய்தியாளா்களிடம் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: 

சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, வெளிநாடுகளிலிருந்து கடந்த மே மாதம் 8-ஆம் தேதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை வரை 12,709 போ் பல்வேறு நாடுகளில் இருந்து சென்னை திரும்பி உள்ளனா்.

இவா்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 381பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டு, அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ளவா்கள் நகரில் உள்ள பல்வேறு தனியார் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு, அவா்களில் 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் முடிவடைந்த 11,406 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

முதல்வரின் உத்தரவுப்படி, சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு கொரோனா நிவாரண நிதி முதல் கட்டமாக ரூ.1,000 மற்றும் இரண்டாவது கட்டமாக ரூ.1,000 என 14,663 சாலையோர வியாபாரிகளுக்கு இதுவரைரூ.2.93 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சென்னையில் உள்ள 59, 679 மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.1,000 ஞாயிற்றுக்கிழமை முதல் மாநகராட்சி அதிகாரிகளால் அவா்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக அடையாறு மண்டலத்தில் 1,197 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,000 நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது என்றார். 

newstm.in 


 

Next Story
Share it