கொரோனா சிகிச்சைக்கு இதை தானம் செய்தால் ரூ.5000 ஊக்கத்தொகை!

கொரோனா சிகிச்சைக்கு இதை தானம் செய்தால் ரூ.5000 ஊக்கத்தொகை!

கொரோனா சிகிச்சைக்கு இதை தானம் செய்தால் ரூ.5000 ஊக்கத்தொகை!
X

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக தங்களது பிளாஸ்மாவை தானம் செய்வோருக்கு 5,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவை தடுப்பதற்கான மருந்து தயாரிக்கும் பணியில் மருத்துவ விஞ்ஞானிகள் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது பிளாஸ்மா சிகிச்சை சிறந்த பலனை தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கொரோனா பாதித்து குணமடைந்த நபருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும். எனவே, அவர்களின் ரத்தத்தில் இருக்கும் செல்களை பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் கலப்பதே பிளாஸ்மா சிகிச்சை. அப்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


கொரோனா நோய்த்தொற்று அதிகம் உள்ள டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில், பிளாஸ்மாதெரபி சிகிச்சையை மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. இந்த நிலையில், கர்நாடக மாநில அரசு 5000 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it