1. Home
  2. தமிழ்நாடு

மகர சங்கராந்தியையொட்டி ஒரே மாவட்டத்தில் ரூ.400 கோடிக்குப் பந்தயம்..!

1

சேவல் சண்டையில், இந்த ஆண்டு ரூ.400 கோடிக்கும் மேல் பந்தயம் கட்டப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் பாரம்பரியமான சேவல் சண்டைக்கு ஆந்திராவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் தடையை மீறி கிருஷ்ணா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சேவல் சண்டை விமரிசையாக நடந்தேறியது.

மேலும் இந்தச் சண்டை பிரம்மாண்டமான திரைகள் அமைக்கப்பட்டு நேரலையாக ஒளிபரப்பானது.

திரைப்பட பாடல் காட்சிகளுக்கு அமைக்கப்படும் பிரம்மாண்ட அரங்குகளைப்போல் ஏற்பாட்டாளர்கள் சேவல் சண்டைக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.

பெரிய கூண்டுகளில் இருந்து திறந்துவிடப்பட்ட சேவல்களின் கால்களில் கூர்மையான கத்திகள் கட்டப்பட்டிருந்தன. ஆவேசமான அந்த சண்டையின்போது கத்தியால் வெட்டப்பட்டு சில சேவல்கள் சம்பவ இடத்திலேயே இறந்துபோனதாகவும், சேவல்கள் மீது பலர் போட்டி போட்டுக் கொண்டு லட்சக்கணக்கில் பந்தயம் கட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் சேவல் சண்டையைப் பார்க்க திரளாகக் கூடினர்.

கிருஷ்ணா மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கும் மேல் பந்தயம் கட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending News

Latest News

You May Like