பாலியல் வழக்கில் குற்றவாளியை தப்பவைக்க ரூ.20 லட்சம் லஞ்சம்.. பெண் காவல் ஆய்வாளர் கைது !

பாலியல் வழக்கில் குற்றவாளியை தப்பவைக்க ரூ.20 லட்சம் லஞ்சம்.. பெண் காவல் ஆய்வாளர் கைது !

பாலியல் வழக்கில் குற்றவாளியை தப்பவைக்க ரூ.20 லட்சம் லஞ்சம்.. பெண் காவல் ஆய்வாளர் கைது !
X

குஜராத்தின் மேற்கு அகமதாபாத் மகளிர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக ஸ்வேதா ஜடேஜா என்ற துணை ஆய்வாளர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2019-ல் கெனல் ஷா என்பவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வந்தார்.

அதாவது ஷா பணிபுரிந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் தன்னுடைய அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார்.
 

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த பெண் ஆய்வாளர் சம்பந்தப்பட்ட குற்றவாளியிடம் ரூபாய் 35 லட்சம் லஞ்சம் வாங்க பேரம் பேசி அவர் மீது பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கை பதிவு செய்யாமல் சாதாரண வழக்கை பதிவு செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த குற்றவாளியிடம் ரூ.20 லட்சம் முதலில் லஞ்சம் வாங்கிய அந்த பெண் எஸ்.ஐ அதன்பின்னர் மீதம் ரூ.15 லட்சத்தை கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.

இதனையடுத்து அந்த குற்றவாளி லஞ்ச ஒழிப்பு துறையினர்களிடம் புகார் செய்த நிலையில் ரூ.15 லட்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கையும் களவுமாக பிடிபட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்

இதனை அடுத்து பெண் ஆய்வாளர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். மேலும் அவர் பதிவு செய்த பாலியல் வழக்கை மீண்டும் புதிதாக விசாரணை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது

அவரை அகமதாபாத்தில் உள்ள அமர்வு நீதிமன்றம் ஒன்றில் போலீஸார் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினர். அப்போது ஸ்வேதாவை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.

லஞ்சம் வாங்கிக்கொண்டு ஒரு பெண் ஆய்வாளரே பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவு செய்யாமல் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

newstm.in 

Next Story
Share it