ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 பென்சன்- எதிர்காலத்துக்காக மத்திய அரசு அசத்தல் திட்டம் !

 | 

ஒவ்வொருவரின் வயது முதிவு காலத்தில் வாழ்க்கை வாழ கைவசம் போதுமான பணம் இருப்பது அவசியமாகும். ஓய்வுக்காலத்தில் பணப்பிரச்னை இருக்கக்கூடாது என கருதி முன்பே திட்டமிட்டு பணத்தை சேமித்து வைப்பர். அதற்கு பென்சன் தொகை உதவியாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு தொகை வந்துகொண்டிருந்தால் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். அதற்கு சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுத்து இப்போதே நீங்கள் சேமிக்கத் தொடங்கவேண்டும். 

அதற்காக தற்போது அடல் பென்சன் யோஜனா திட்டம் மிக உதவியாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் வரையில் பென்சன் வாங்கலாம். 2015ஆம் ஆண்டில் இத்திட்டம் முதன்முதலில் தொடங்கப்பட்டபோது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன் கிடைத்தது. 

old

ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணையலாம். 18 முதல் 40 வயது வரையுள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் இணைந்து பென்சன் வாங்கலாம். வங்கி அல்லது தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருக்க வேண்டும். 60 ஆண்டுகள் கழித்து பென்சன் தொகை கிடைக்கும்.  

இத்திட்டத்தில் குறைந்தது 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை பென்சன் கிடைக்கும். ஆதார் எண், மொபைல் நம்பர் போன்றவை கட்டாயம். 18 வயதில் நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கினால் ஒவ்வொரு மாதமும் 210 ரூபாய் பென்சன் செலுத்த வேண்டும். திருமணம் ஆன கணவன் - மனைவி இருவரும் இத்திட்டத்தில் இணைந்து 10,000 ரூபாய் வரை பென்சன் வாங்கலாம்.

கணவன் - மனைவி இருவரும் 30 வயதுக்குக் குறைவாக இருந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.577 பிரீமியம் செலுத்த வேண்டும். அடல் பென்சன் திட்டத்தில் ரூ.1.5 லட்சம் வரையில் வரிச் சலுகையும் கிடைக்கிறது என்பது சிறப்பம்சமாகும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP