1. Home
  2. தமிழ்நாடு

ஆட்டோவுக்கு கயிறு, டூ வீலருக்கு பாடை : காங்கிரஸ் நூதன ஆர்ப்பாட்டம்..!

ஆட்டோவுக்கு கயிறு, டூ வீலருக்கு பாடை : காங்கிரஸ் நூதன ஆர்ப்பாட்டம்..!


தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து 97 ரூபாய்19 காசுகளுக்கும், டீசல் விலை 27 காசுகள் உயர்ந்து 91 ரூபாய் 42 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்குகிறது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ஒருசில இடங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த போதிலும் அத்தியாவசிய பொருட்களுக்கான சரக்கு போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போக்குவரத்துக்கு முக்கிய மூலப் பொருளாக விளங்கும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதைக் கண்டிக்கும் விதமாக, இன்று (11ம் தேதி) பெட்ரோல் பங்க்குகள் முன்பு திரண்டு அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல இடங்களில் இன்று காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே, சட்டமன்ற உறுப்பினர் பழனி தலைமையில் இரு சக்கர வாகனத்திற்கு பாடை கட்டி, மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டையூர் பகுதியில், பெட்ரோல் பங்க் முன்பு ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து போராட்டம் நடத்தினர்.

Trending News

Latest News

You May Like