விவசாய நிலத்தில் ஓய்வு எடுத்த 15 அடி நீள ராஜநாகம்.. விவசாயிகள் அலறல் !

விவசாய நிலத்தில் ஓய்வு எடுத்த 15 அடி நீள ராஜநாகம்.. விவசாயிகள் அலறல் !

விவசாய நிலத்தில் ஓய்வு எடுத்த 15 அடி நீள ராஜநாகம்.. விவசாயிகள் அலறல் !
X

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த நரசீபுரம் மலையடிவாரபகுதியில் விவசாய நிலத்தில் ராஜநாகம் புகுந்தது. இதனை கண்டு விவசாயிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்து வனச்சரகர் ஆரோக்கியசாமி தலைமையில் அங்கு சென்ற வனதுறையினர் பாம்பு பிடிக்கும் நபர்கள் உதவியுடன் விவசாய நிலத்தில் இருந்த 15 அடி நீளமுள்ள பெண் ராஜநாகத்தை பிடித்தனர்.

நாகத்தின் உடல் நலத்தை பரிசோதனை செய்த வனத்துறையினர், பின்னர் வனத்துறை வாகனத்திலேயே கொண்டு சென்று சிறுவாணி அடர்வனப்பகுதியில் அதனை விடுவித்தனர்.

ஏற்கனவே இரண்டு முறை இந்த ராஜநாகம் நரசீபுரம் விவசாய நிலத்தில் இருந்து பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. ஆனால் ராஜநாகம் தொடர்ந்து நரசீபுரம்  பகுதிக்கு வருவதால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

 

newstm.in 

Next Story
Share it