உணவகங்கள், மளிகைக் கடைகள் இயங்கும், ஆனால் ஒரு நிபந்தனை - தமிழக அரசு

 | 

உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை முதல் இரவு வரை இயங்கும் என்றும், மக்கள் அச்சப்பட தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மக்களுக்கு தங்கு தடையின்றி பொருட்கள் கிடைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் அனைத்து வகையான கடைகளிலும் மக்கள் 3 அடி இடைவெளிவிட்டு நின்றே பொருள்களை வாங்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது. ஊபர், ஸ்விக்கி போன்ற ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு தடை தொடர்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மளிகை கடைகள் வீடுகளுக்கே சென்று, பொருட்களை விநியோகிக்கலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.  


மேலும் தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்பு அறிவித்த ஊரடங்கு மார்ச் 31 முடிவடையும் நிலையில் பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து ஏப்ரல் 14 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP