பொறுப்புகளை உணர்ந்து செயல்படுங்க: திமுகவினருக்கு முதல்வர் அட்வைஸ்..!

 | 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: “கடந்த ஆட்சியில் தேர்தல் நடக்காத 9 மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றியை குவித்துள்ளது.

கடந்த 5 மாதம் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு தமிழக மக்கள் மனப்பூர்வமாக வழங்கியுள்ள நற்சான்றிதழ்தான் இந்த வெற்றி. மக்கள் பணியில் ஈடுபடும் போது நமது மனசாட்சியே நமக்கு எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும்.

திமுக சார்பில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் அவர்களின் அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய மக்கள் பிரதிநிதிகளாக, மக்கள் சேவகர்களாக எந்நாளும் உழைத்திட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் உங்களுக்கு கிடைத்துள்ள பொறுப்புகளை உணர்ந்து ஊக்கத்துடன் மக்கள் பணியாற்றுங்கள். பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்.

தூய்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க வேண்டும். மக்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டுமே அன்றி, நிர்வாகத்தின் மீது குறை சொல்லக் கூடிய நிலை உருவாகக் கூடாது. ஜனநாயகத்தில் மக்கள் தான் நமக்கு எஜமானார்கள்; நாம் அவர்களுக்கு தொண்டு செய்ய வேண்டியவர்கள் என்பதை எந்நாளும், எப்போதும் நெஞ்சில் கொண்டு செயலாற்ற வேண்டும்” என அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP