1. Home
  2. தமிழ்நாடு

ஷங்கர் படத்தில் ராஷ்மிகா மந்தனா...? வெளியானது புது அப்டேட்

ஷங்கர் படத்தில் ராஷ்மிகா மந்தனா...? வெளியானது புது அப்டேட்

அடுத்ததாக ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமா நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த படம் இந்தியன் 2. கடந்த 2020 பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்று வந்த ஷூட்டிங்கில் விபத்து ஏற்பட்டது. அதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.கடந்த ஒராண்டுக்கும் மேலாகியும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு இதுவரை தொடங்கவில்லை. இதனால் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் இருவரும் மற்ற படங்களில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இயக்குநர் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சரிஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக முதற்கட்ட தகவல் கூறுகின்றன.தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக, தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த தகவல் எதுவும் உறுதியாக தெரியவில்லை.

நடிகை ராஷ்மிகா மந்தனா கார்த்தி நடித்துள்ள சுல்தான் படம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மேலும், நெல்சன் இயக்கும் விஜய் படத்தில் அவரை கதாநாயகியாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

Trending News

Latest News

You May Like