ரேபிட் டெஸ்ட் வேலைக்கு ஆகாது... பிசிஆர் தான் ஒரே வழி : ஐசிஎம்ஆர் திட்டவட்டம்!

ரேபிட் டெஸ்ட் வேலைக்கு ஆகாது... பிசிஆர் தான் ஒரே வழி : ஐசிஎம்ஆர் திட்டவட்டம்!

ரேபிட் டெஸ்ட் வேலைக்கு ஆகாது... பிசிஆர் தான் ஒரே வழி : ஐசிஎம்ஆர் திட்டவட்டம்!
X

கொரோனாவை கண்டறிய பிசிஆர் பரிசோதனை முறையை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்றும், ரேபிட் டெஸ்ட் கருவி கண்காணிப்புக்காக மட்டுமே என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. 

கொரோனாவைக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தொடர்பாக ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் புகார்கள் அளித்ததை அடுத்து சீனா நிறுவனங்களின் தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ரேபிட் டெஸ்ட் கருவி என்பது கொரோனா குறித்த கண்காணிப்புக்காக தான் என்றும், தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய அதனை பயன்படுத்தப்பட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது. 


ரேபிட் டெஸ்ட் பயன்பாட்டை இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியிருந்த நிலையில், பிசிஆர் பரிசோதனை முறையே உகந்தது என கூறியுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை குறித்து மாநிலங்களுக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it