1. Home
  2. தமிழ்நாடு

ரமலான் பிறை தெரிந்தது - உலமா பேரவை அறிவிப்பு!

ரமலான் பிறை தெரிந்தது - உலமா பேரவை அறிவிப்பு!


தமிழக - கேரள எல்லையில் நம் மாநில பகுதியில் ரமலான் பிறை தென்பட்டதால் இன்று (24.04.20) வெள்ளிக்கிழமை நாள் ஒன்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் அவர்கள் நோன்பு இருப்பது வழக்கம். பிறை தெரிவதன் அடிப்படையில் இந்த ரமலான் மாதம் தொடங்குவது அறிவிக்கப்படும். பிறை தெரியும் நாள் நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்நிலையில் தமிழக - கேரள எல்லையில் பிறை தென்பட்டதால் இன்று (24.04.20) வெள்ளிக்கிழமை ரமலான் ஒன்று என்பதாக குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா பேரவை மற்றும் குமரி மாவட்ட அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு ரமலான் நோன்பு சற்று சிரமத்தை அளிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் ரமலான் தொழுகையை வீட்டிலேயே மேற்கொள்ள இஸ்லாமிய தலைவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.     

newstm.in

Trending News

Latest News

You May Like