1. Home
  2. தமிழ்நாடு

நாளை ரமலான் திருநாள்! தலைமை காஜி அறிவிப்பு!!

நாளை ரமலான் திருநாள்! தலைமை காஜி அறிவிப்பு!!

தமிழகத்தில் நாளை வெள்ளிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்பட்டுகின்றது. இந்த மாதத்தில் கடுமையான விரதம், கூடுதல் சிறப்பு தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன.
இறுதியில் ஏழைகளின் வரியாக ஜக்காத் என்னும் கடைமையை நிறைவேற்றி ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையில் ஒன்றான ரமலான் பண்டிகையின் நோன்பு கடந்த ஏப்ரல் 14-ம் தேதி மக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினார். இறைவனின் திருவசனங்கள் இறங்கிய மாதம் என்பதால் ரமலான் மாதத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் இரண்டு கடமைகள் ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன. சூரிய உதயத்துக்கு முன் உணவு உண்டு, இடையில் அன்னம், தண்ணீர் இல்லாமல் சூரிய அஸ்தமனம் வரை நோன்பு இருக்கும் நிகழ்வை ரமலான் மாதத்தின் 30 நாட்களும் இஸ்லாமியர்கள் கடைப்பிடிப்பர்.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று பிறை தென்படாததால் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like