ரமலான் நோன்பு இன்று தொடக்கம்! இஸ்லாமியர்கள் வீடுகளில் தொழுகை!!

ரமலான் நோன்பு இன்று தொடக்கம்! இஸ்லாமியர்கள் வீடுகளில் தொழுகை!!

ரமலான் நோன்பு இன்று தொடக்கம்! இஸ்லாமியர்கள் வீடுகளில் தொழுகை!!
X

இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு இன்று துவங்கியது. இதையொட்டி இஸ்லாமிய பெருமக்கள், தங்கள் வீடுகளில் தொழுகையில் ஈடுபட்டனர்.

ரமலான் நோன்பை ஆண்டு தோறும் ரமலான் பிறை கண்டு துவங்குவது வழக்கம். ஆண்டு தோறும் துவக்க நாளில் அதிகாலையில் மசூதிகளுக்கு சென்று தொழுகை செய்வார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தால், இஸ்லாமியர்கள் மசூதிகளில் கூடவில்லை. அரசின் அறிவுறுத்தலை ஏற்று, வீடுகளிலேயே தொழுகையுடன் ரமலான் நோன்பை தொடங்கினர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள், அதிகாலை தங்கள் வீடுகளில் குடும்பத்தினரோடு தொழுகையில் ஈடுபட்டு நோன்பை துவக்கினர். தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் வீடுகளில் தனிமனித இடைவெளியுடன் தொழுகை நடத்தப்பட்டது. 

newstm.in

Next Story
Share it