ரஜினிகாந்த், விஜய் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு! கன்னடர், கிறிஸ்துவர் என்று ட்வீட்!!

ரஜினிகாந்த், விஜய் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு! கன்னடர், கிறிஸ்துவர் என்று ட்வீட்!!

ரஜினிகாந்த், விஜய் மீது நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு! கன்னடர், கிறிஸ்துவர் என்று ட்வீட்!!
X

நடிகை மீரா மிதுனின் சர்ச்சை பேச்சு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் வெளியே தெரிந்த அவர் தன்னை ஒரு மிகப்பெரிய செலிபிரிட்டியாக நினைத்து கருத்து சொல்லி வருகிறார். 

நடிகர், நடிகைகள், அரசியல் கட்சித் தலைவர்கள் பற்றி எல்லாம் கருத்து கூறிவந்த மீரா மிதுன், தற்போது தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய் மீது குற்றம் சாட்டி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் எல்லோரும் இறந்து கொண்டிருக்கின்றனர்,  உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள், நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கன்னடர் ரஜினி, கிறிஸ்துவர் விஜய் என் மீது அவதூறு பரப்ப முயற்சி செய்கிறார்கள் என்றும், அதனை சட்டப்படி எதிர்கொள்ள தயங்கமாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் சிலர் மீரா மிதுனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று கேட்கின்றனர்.

newstm.in

Next Story
Share it