நான் வசதியுடன் வாழக் காரணம் கே.பி.பாலசந்திரன் என ரஜினி உருக்கம்..!

நான் வசதியுடன் வாழக் காரணம் கே.பி.பாலசந்திரன் என ரஜினி உருக்கம்..!

நான் வசதியுடன் வாழக் காரணம் கே.பி.பாலசந்திரன் என ரஜினி உருக்கம்..!
X

மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து செய்தியை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

அதில், இன்று என் குருவான கே.பி அவர்களின் 90வது பிறந்தநாள். கே பாலசந்தர் அறிமுகப்படுத்தாவிட்டாலும் நான் நடிகனாக ஆகியிருப்பேன். ஏன்னென்றால் கன்னட மொழியில் சின்னச்சின்ன கேரக்டரில் நடித்திருப்பேன்.

ஆனால், இன்று நான் பெரும் புகழோடு நல்ல வசதியுடன் வாழ காரணம் கே.பாலச்சந்தர் சார் அவர்கள் தான். என்னுடைய மைனஸ் பாயிண்ட் எல்லாம் நீக்கி எனக்குள் இருக்கும் பிளஸ் பாயிண்ட்களை எனக்கு தெரிவித்து முழு நடிகனாக்கி நான்கு படங்களில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து ஒரு நட்சத்திரமாக தமிழ் திரையுலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்தினார்.என் வாழ்க்கையில் அப்பா அம்மா அண்ணா இவர்கள் வரிசையில் கே.பி இருக்கிறார்.

மிகப்பெரிய மகான் எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்து ஒரு அர்த்தத்தோடு வாழ்ந்த என்குரு அவர்களை நினைவு கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ரஜினிகாந்த் அந்த வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it