யாரு பெஸ்ட்... ரஜினி - விஜய் ரசிகர்கள் மோதல்! ஒருவர் பலி!!

யாரு பெஸ்ட்... ரஜினி - விஜய் ரசிகர்கள் மோதல்! ஒருவர் பலி!!

யாரு பெஸ்ட்... ரஜினி - விஜய் ரசிகர்கள் மோதல்! ஒருவர் பலி!!
X

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்கியது தொடர்பாக ரஜினி ரசிகரும், விஜய் ரசிகரும் சண்டைப் போட்டுக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரக்காணம் சந்திகாப்பான் கோயில் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி யுவராஜ் விஜய் ரசிகர் ஆவார். அவரது வீட்டின் அருகில் வசிக்கும் தினேஷ்பாபு ரஜினி ரசிகர். இருவரும் குடிபோதையில் இருந்த போது கொரோனா நிவாரண நிதிக்கு அதிகம் பணம் கொடுத்தது விஜய்யா, ரஜினியா என்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது  ஆத்திரம் அடைந்த தினேஷ்பாபு யுவராஜை தாக்கினார். கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்த யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 


சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  தினேஷ்பாபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

Next Story
Share it