கைது செய்யப்படுவதை தடுக்க போலீசாருக்கு ராஜ் குந்த்ரா ரூ. 25 லட்சம் கையூட்டு..?

 | 

ஆபாச பட வழக்கில் கைதாவதை தடுக்கும் பொருட்டு, மும்பை குற்றப்பிரிவு காவல்துறைக்கு தொழிலதிபர் ராஜ்குந்த்ரா ரூ. 25 லட்சம் கையூட்டு கொடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் மாடல்களை வைத்து ஆபாச படங்களை தயாரித்து, அதை வெளிநாட்டு செயலிகளுக்கு விற்பனை செய்ததாக பிரபல் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா கைது செய்யப்பட்டுள்ளார். அவரை முக்கிய குற்றவாளியாக கூறியுள்ள மும்பை காவல்துறை, தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் ஆபாச படங்களில் நடிக்கச்சொல்லி ராஜ்குந்த்ரா தங்களை மிரட்டியதாக 3 பெண்கள் புகார் அளித்துள்ளது இந்த விவகாரத்தில் சூட்டை கிளப்பியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக ராஜ்குந்த்ரா தரப்பில் இருந்து மும்பை குற்றப்பிரிவு போலீசாருக்கு ரூ. 25 லட்சம் கையூட்டு கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

விரைவில் அதற்கான விசாரணையையும் காவல்துறை தரப்பில் இருந்து துவங்கப்படவுள்ளது. ராஜ் குந்தராவுக்கு ஆதரவாக இருக்கும் காவல்துறையினரை கண்டுப்பிடித்து களை எடுக்கவும் வழக்கை விசாரிக்கும் போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP