திமுக அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு?- ஒன்றிய அரசு கோபத்துக்கு ஆளாகும் ஸ்டாலின்?

 | 

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை கைப்பற்றியது. மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைத்த கையோடு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

கொரோனா சிகிச்சைக்கான தடுப்பு மருந்து, தடுப்பூசி, ஆக்சிஜன் என பல விஷயங்களில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு மறைமுகமாக புறக்கணித்தாலும், பல கட்டுப்பாடுகளை கொண்டுவந்து பாதிப்பை திமுக அரசு குறைத்தது. எனினும் தற்போது மத்திய அரசு அதிகளவு தடுப்பூசியை தமிழகத்துக்கு வழங்கி வருகிறது. ஸ்டாலின் அணுகுமுறையிலும் முதிர்ச்சியும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலிருந்தும் அவருக்கு  பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

stalin

மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுகவுக்கு ஸ்டாலினின் ஆட்சி நிர்வாகம் நாடு முழுவதும் நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. அத்துடன் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிராந்திய கட்சிகள் அணி திரள வேண்டும் என வலியுறுத்தி ஸ்டாலின் முக்கிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார். 

நடந்த முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட், சிஏஏ, மூன்று வேளாண் சட்டங்கள் ஆகியவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இவை கவனம் பெற்றுள்ளன. பாஜகவுக்கு எதிராக அணி வகுக்கும் கட்சிகளுக்கு ஸ்டாலினின் அணுகுமுறை முன்னுதாரணமாக விளங்கும் வகையில் உள்ளது. அதேநேரத்தில் மத்திய அரசை திமுக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.

இதனால் தற்போது பாஜகவின் கோபம் திமுக பக்கம் திரும்பியுள்ளதாக கூறப்பகிறது. அமலாக்கத்துறையை பயன்படுத்தி திமுக சீனியர் அமைச்சர்கள் சிலரை குறி வைத்து ரெய்டு நடத்த திட்டமிடுவதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் திமுக மீது தற்போது உருவாகிவரும் நல்ல அபிப்ராயம் சிதையும் என்றும் அவர்களுக்கு வைக்கும் நல்ல செக்காக இது இருக்கும் என்கிறார்கள் ஒன்றிய அரசுக்கு நெருக்கமாக இருக்கும் சிலர்.  

stalin

ஒன்றிய அரசு கொண்டுவந்த சட்டங்களுக்கு எதிராக மசோதா நிறைவேற்றிய பின் இதுபோன்று ரெய்டு நடத்தினால் திமுகவை இதற்காக தான் குறிவைக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். திமுக அதை எளிதாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றுவிடும். குஜராத், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா, இமாச்சல் பிரதேசம் தேர்தல்கள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு அது பயன்படும் எனவும் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
 
எனவே பாஜக அரசு திமுக மீது உடனடியாக குறிவைக்கப் போகிறதா அல்லது கொஞ்சம் விட்டுப்பிடிக்கப் போகிறதா என்பது அடுத்த சில வாரங்களில் தெரியவரும்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP