1. Home
  2. தமிழ்நாடு

உலகளவில் 2 நாட்களில் புஷ்பா 2 ₹449 கோடி வசூல்..! அதிகாரபூர்வ அறிவிப்பு..!

1

புஷ்பா படத்தின்அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக புஷ்பா 2 படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் நேற்றைய தினம் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது. 

புஷ்பா 2 படத்தின் முதல் பாகம் கடந்த 2021ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய மாஸ் வெற்றியை பெற்றது. படத்தின் இந்த சூப்பர்ஹிட்டை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகத்திற்கும் அடித்தளம் போடப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக உருவாகிவந்த இந்தப் படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் இந்தப்படம் ரிலீசான நிலையில், இந்தியா முழுவதிலும் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட படக்குழுவினர் பிரமோஷன்களில் ஈடுபட்டனர்.


அல்லு அர்ஜுனின் நடிப்பு பாராட்டுக்களை பெற்ற நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் அதிகப்படியான கவர்ச்சி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இதை என்ஜாய் செய்தவர்களும் இருக்கத்தான் செய்தனர். இதனிடையே படத்தில் ஸ்ரீலீலாவின் டான்சும்அதிகமான விமர்சனங்களை பெற்றுள்ளது. முதல் பாகத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட நிலையில் அது சிறப்பாக அமைந்திருந்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலீலாவும் இந்தப் பாடலில் அதிகப்படியான கவர்ச்சிக் காட்டியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.


இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.முதல் நாளில் சர்வதேச அளவில் இந்தப் படம் 294 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய அளவில் முதல் நாள் கலெக்ஷனில் இந்தப்படம் அதிகப்படியான வசூலை குறித்துள்ள நிலையில், இதுகுறித்து ரசிகர்களும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பகிர்ந்து வருகின்றனர்.

உலகளவில் 2 நாட்களில் ₹449 கோடி வசூலைக் குவித்துள்ளதாக பட நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது 


 

Trending News

Latest News

You May Like