1. Home
  2. தமிழ்நாடு

கொரோனாவின் கவனத்தை ஈர்த்த புளியங்குடி.. அங்கு மட்டும் இவ்வளவு பேர் பாதிப்பா..?

கொரோனாவின் கவனத்தை ஈர்த்த புளியங்குடி.. அங்கு மட்டும் இவ்வளவு பேர் பாதிப்பா..?


புளியங்குடியில் மட்டும் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து 35 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவும் சூழலில் சென்னையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதேநேரத்தில் புளியங்குடியில் சத்தம் இல்லாமல் அதிகளவு கொரோனா பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. 

தென்காசி மாவட்டம் புளியங்குடி அகஸ்தியர் கோவில் தெருவைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து கடந்த 17 ஆம் தேதி வரை காயிதேமில்லத் தெரு,முத்து தெரு, அகஸ்தியர் தெரு ஆகிய தெருக்களைச் சேர்ந்த 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கொரோனாவின் கவனத்தை ஈர்த்த புளியங்குடி.. அங்கு மட்டும் இவ்வளவு பேர் பாதிப்பா..?

அடுத்தநாள் 4 பேரும், 19 ஆம் தேதி 4 பேரும்,20 ஆம் தேதி 4 பேரும் 21 ஆம் தேதி 5 பேரும், 23, 24 ஆம் தேதிகளி தலா  ஒருவரும் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே இன்று மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது முத்துதெரு, ஊர்காவல்போத்தி தெரு, காந்திபஜார், கன்னிமாரையம்மன்கோவில் தெரு ஆகிய தெருக்களைச் சேர்ந்தவர்களாவர்.

கொரோனாவின் கவனத்தை ஈர்த்த புளியங்குடி.. அங்கு மட்டும் இவ்வளவு பேர் பாதிப்பா..?

புளியங்குடியில் மட்டும் கொரோனா அடுத்தடுத்து பரவி வருவதால் அங்கு முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் நககராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

newstm.in 


 

Trending News

Latest News

You May Like