பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! தேர்வு எப்போது? ரிசல்ட் எப்போது?

10, 11, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த அறிவிப்பினை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
பொதுத்தேர்வு எப்போது?:
* 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வானது வரும் மார்ச் 3 -25 ஆம் தேதி வரை நடைபெறும்.
* 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வானது வரும் மார்ச் 5 - 27 ஆம் தேதி வரை நடைபெறும்.
* 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வானது வரும் மார்ச் 28 - ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறும்.
செய்முறை தேர்வு:
* 12 ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 7 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும்.
* 11ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 11 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும்.
* 10ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 22 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும்.
ரிசல்ட் எப்போது?:
12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவானது வரும் மே 1 ஆம் தேதி வெளியிடப்படும்.
11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவானது வரும் மே 19 ஆம் தேதி வெளியிடப்படும்.
10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவானது வரும் மே 19 ஆம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.