1. Home
  2. தமிழ்நாடு

தமிழகம் முழுவதும போராட்டம் – தி.மு.க. அறிவிப்பு!

Q

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட மற்றும் மாநில அமைப்பாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில்,
மதத்தின் பெயரில் பிற்போக்குச் சிந்தனையைத் தமிழ்நாட்டில் பரப்ப முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. அரசின் சதி திட்டத்தை எதிர்த்துப் பகுத்தறிவுப் பிரசாரம் மேற்கொள்வோம்!
ஒன்றிய கல்வி அமைச்சர் ஆணவப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு, தமிழ்நாட்டின் கல்வி நிதியை வழங்கும் வரை தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்த மாணவர் போராட்டம் நடைபெறும்!
இந்தியை கட்டாயமாகத் திணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக 25-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப்போராட்டம் நடத்தப்படும். 25-ந்தேதி மத்திய அரசு நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும்.

Trending News

Latest News

You May Like