தஞ்சையில் மசாஜ் சென்டரில் விபச்சாரம்!

 | 

தஞ்சையில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடைபெற்று வந்ததை அடுத்து 5 பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் தற்போது பொதுமுடக்க கஷ்டத்தை பயன்படுத்தி பலரும் பெண்களை இந்த தொழிலுக்கு அழைத்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது தஞ்சையிலும் இதுபோன்ற நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

prostituetion

பாலாஜி நகரில் ஒரு மசாஜ் சென்டரில்  இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக தெற்கு போலீஸ் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்த சிலர் தப்பிச் சென்றனர்.  மசாஜ் சென்டரை போலீசார் சோதனை செய்தனர்.

prostituetion

அதில் சென்னையை சேர்ந்த முகமது முஸ்தபா (40), ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தபோது அவர்கள் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய பகுதியில் இருந்து அழகிகளை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது முஸ்தபா, சதீஷ் மற்றும் 5 அழகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP