வீடியோ கால் மூலம் வழக்கு விசாரணை.. வழக்கறிஞரின் உடையால் கடுப்பான நீதிபதி...!

வீடியோ கால் மூலம் வழக்கு விசாரணை.. வழக்கறிஞரின் உடையால் கடுப்பான நீதிபதி...!

வீடியோ கால் மூலம் வழக்கு விசாரணை.. வழக்கறிஞரின் உடையால் கடுப்பான நீதிபதி...!
X

கொரோனா பரவலால் காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், வழக்கறிஞர் ஒருவர் பனியனுடன் விசாரணையில் கலந்துகொண்ட சம்பவம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நடந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற நடவடிக்கைகளுக்கும், கடைகளும் மூடப்பட்டுள்ளன. 

நீதிமன்றங்களை பொறுத்தவரை குறைந்தபட்ச நீதிபதிகளைக் கொண்டு அவசர வழக்குகளை மட்டும் விசாரித்து வருகிறது.

எனினும், தனிமனித இடைவெளியை கருத்தில்கொண்டு காணொலி காட்சி மூலமாக வழக்கு விசாரணைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

நீதிமதி சஞ்சீப் பிரகாஷ் அமர்வு ஜாமின் வழக்கு தொடர்பான விசாரணையை காணொலி காட்சி மூலமாக மேற்கொண்டார். அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வெறும் பனியன் (உள்ளாடை) அணிந்து வாதத்தில் பங்கேற்றுள்ளார்.

இதனால், கடுப்பான நீதிபதி உடனே வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். மேலும், ஒரு சுற்றறிக்கையையும் அனுப்பியுள்ளார். அதில். “கொரோனா தொற்று காரணமாக நீதிமன்றங்கள் காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்து வருவது அனைவரும் அறிந்ததே, காணொலி காட்சி வாயிலாக நடக்கும் விசாரணையில் வழக்கறிஞர்கள் சரியான உடையை அணிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

newstm.in 

Next Story
Share it