சொத்து தகராறு.. தூக்கத்தில் ரத்த வெள்ளத்தில் மிதந்த தம்பி.. அண்ணன் தலைமறைவு !  

 | 

கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு விதிக்கப்பட்டப்போதும் குற்றச்செயல்கள் நிகழ்ந்து கொண்டுதான் வருகின்றன. கொரோனா பணியில் போலீசார் இருப்பதால் இதுபோன்ற குற்றங்களை விரைந்து சென்று தடுப்பதில் போலீசாருக்கு சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது. 

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே நிகழ்ந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாடானை அருகேயுள்ள கோனே ரிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் பார்த் திபன் (31). இவரது அண்ணன் வேலு (33). இவர்கள் இருவரும் தங்களது பூர்வீக வீட்டில் வசித்தனர். ஆனால், தான் மட்டுமே இங்கு வசிக்க வேண்டும் என தம்பியிடம் வேலு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பார்த்திபனை, வேலு கத்தியால் குத்தினார். அவரது சத்தம்கேட்டு சென்று குடும்பத்தினர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் பலத்த காயமடைந்த பார்த்திபனை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பார்த்திபனின் மனைவி வினோதினி அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான வேலுவை தேடி வருகின்றனர்.

newstm.in 

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP