கொரோனாவால் பணியை இழந்த பேராசிரியர் !! முறுக்கு விற்கும் வியாபாரியாக மாறினார்..

கொரோனாவால் பணியை இழந்த பேராசிரியர் !! முறுக்கு விற்கும் வியாபாரியாக மாறினார்..

கொரோனாவால் பணியை இழந்த பேராசிரியர் !! முறுக்கு விற்கும் வியாபாரியாக மாறினார்..
X

கொரோனாவின் காரணமாக வேலையை இழந்த தனியார் கல்லூரி பேராசிரியர் மகேஸ்வரன் (வயது 30), தனது அன்றாட தேவையை சமாளிக்க முறுக்கு விற்பனை செய்து வருகிறார். இவரிடம் இது குறித்து விசாரணை செய்கையில், எனது சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி. நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்கில் முதுகலை பட்டம் பயின்றுள்ளேன்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையின் தலைவர் மற்றும் பேராசிரியராக பணியாற்றி வந்தேன். கையில் சம்பளம், பிடித்த வேலை என வாழ்க்கை நல்ல நிலையில் சென்று கொண்டு இருந்த நிலையில், கொரோனாவால் எல்லாம் தலைகீழாக மாறியது.

முதலில் சம்பளத்தில் சில விழுக்காடு பிடித்தம் செய்யப்படும் என்று கூறிய நிலயில், புதிதாக கல்லூரியில் மூன்று மாணவர்களை சேர்த்தால் மட்டுமே வேலை உறுதி என்று நிர்வாகம் கூறியது. இதில் எனக்கு விருப்பம் இல்லை.

எனது பணியை துறந்து சொந்த ஊருக்கு திரும்பினேன். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் திருமணம் முடிந்து ஆறு மாத குழந்தை மற்றும் மனைவி என்னை நம்பி இருக்கின்றனர்.

இதனால் குடும்ப தேவையை பூர்த்தி செய்ய அப்பாவின் மிட்டாய் கடைக்கு சரிவர சரக்கு வராமல் இருந்ததை அடுத்து, முறுக்கு சுட்டு கடை வைத்தேன். எனது கடை சுற்றுவட்டார பகுதிகளில் தாமாக மக்களின் தேவையால் அறியப்பட்டு , வியாபாரிகளும் வந்தனர்.

தினமும் நான்கு முதல் ஐந்து கடைகளில் இருந்து வியாபாரிகள் வந்து முறுக்கு வாங்கி செல்வார்கள். இதனால் நாளொன்றுக்கு ரூ.500 செலவு போக வருமானம் வருகிறது. கொரோனா சூழ்நிலை சரியானதும் எனது பணியை தேடுவேன் என்று கூறினார்.

Newstm.in

Next Story
Share it