இந்த ஆவின் பால் பாக்கெட் உற்பத்தி நிறுத்தம்..!

ஆவின் சார்பில் தினமும், 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதை கொழுப்பு சத்து அடிப்படையில் பிரித்து, ஆரஞ்ச், பச்சை, நீலம், பிங்க் நிற பாக்கெட்டுகளில் அடைத்து, ஆவின் விற்பனை செய்கிறது.
ஊதா நிறத்தில் பசும் பால் விற்பனையும் நடக்கிறது. அது மட்டுமின்றி, பச்சை, வெள்ளை நிறம் கலந்த பாக்கெட்டில், 90 நாட்கள் கெடாத பால், 2022 நவம்பரில் அறிமுகமானது. இதை குளிர்சாதன பெட்டியில் வைக்காமல், திறந்தவெளியில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
பாலில் பாக்டீரியாக்கள் முழுதும் நீக்கப்பட்டதாலும், ஏழு லேயர் பாலிதின் பயன்படுத்தி பாக்கெட் உருவாக்கப்பட்டதாலும் பால் கெடுவதில்லை. இந்த பால் பாக்கெட் தயாரிக்க, சோழிங்கநல்லுார் பால் பண்ணையில், தினமும் ஒரு லட்சம் லிட்டர் பேக்கிங் செய்யும் திறன் உடைய கட்டமைப்பு வசதிகள், பல கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டன.
இந்த பாலில், 3.5 சதவீதம் கொழுப்பு, 8.5 சதவீதம் மற்ற சத்துக்கள் இருக்கும். தொலைதுார பயணம் செல்வோருக்கும், மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களிலும், இந்த பால் பாக்கெட் பெரிதும் உதவும் என்றும் ஆவின் நிறுவனம் கூறியது.
அதன்படி, கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலின் போது, இந்த பால் பாக்கெட்டுகள் பொதுமக்களுக்கு அதிக அளவில் கைகொடுத்தன.
இந்நிலையில் பேரிடர் உள்ளிட்ட அவசர காலங்களில் பயன்படுத்தப்படும், 90 நாட்கள் கெடாத ஆவின் பால் பாக்கெட் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது,