தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொரோனாவால் பலி !!

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொரோனாவால் பலி !!

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொரோனாவால் பலி !!
X

திருப்பதியில் கேப்டன் டிவி தொலைக்காட்சியில் பணியாற்றும் நிருபர் சுப்பிரமணி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார். கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றும் மருத்துவர்கள் , அரசு அதிகாரிகள் , அமைச்சர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் , என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதே போல் ஊடகவியலார்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி திருமலையில் தமிழக செய்தி தொலைக்காட்சியான கேப்டன் டிவியில் சுப்பிரமணி என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக நிருபராக பணியாற்றி வருகிறார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருப்பதியில் உள்ள கோவிட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று மாலை அவர் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இவருடைய உயிரிழப்பு பல்வேறு பத்திரிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

Newstm.in

Next Story
Share it