தமிழகத்தில் இன்று முதல் பேருந்துகள் இயங்க தடை !!

 | 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதுவரை 90 ஆயிரத்தை கடந்தது. பலி எண்ணிக்கை 1200  யை தாண்டியுள்ளது. குறிப்பாக இதன் பாதிப்பு சென்னையில் தான் அதிகமாக உள்ளது.

குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் பொது போக்குவரத்து இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. ஏற்கனவே கோவையில் மிகக் குறைந்த அளவில் மட்டுமே பொது போக்குவரத்து இயக்கப்பட்ட நிலையில் தற்போது அனைத்தும் நிறுத்தப்பட்டதால் , தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்பவர்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது போக்குவரத்து நிறுத்தம் தொடர்பான தகவல் தெரியாமல் காலையில் பொதுமக்கள் சிலர் வழக்கம்போல பேருந்து நிலையத்திற்கு வந்த பின்னரே அவர்களுக்கு பேருந்துகள் இயங்காது என்பது தெரியவந்தது.

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP