சிறையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை!

சிறையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை!

சிறையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை!
X

புழல் சிறையில் கொலை வழக்கில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஆட்டந்தாங்கல் கிராமத்தில் வசித்து வருபவர் துளசிராமன். இவர் சந்தேகத்தின் பேரில் தமது மனைவி அஞ்சம்மாளை கடந்த மாதம் 16-ஆம் தேதி கொலை செய்துள்ளார். பின்பு இவர் சோழவரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் புழல் சிறையின் தனி அறையில் மின்விசிறியால் தமது லுங்கியில் தூக்கிட்டு துளசிராமன் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட சிறைக்காவலர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் துளசிராமன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மனைவியை கொலை செய்த மன அழுத்தத்தில் இருந்த துளசிராமன் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it