1. Home
  2. தமிழ்நாடு

நாளை பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்கா பயணம்..!

1

ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து பிரிக்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை  (செவ்வாய்க்கிழமை) முதல் 24-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

கொரோனா காரணமாக கடந்த 2019-ம் ஆண்டுக்குப்பின் இந்த மாநாடு காணொலி மூலமாகவே நடைபெற்று வந்தது. தற்போது தொற்று கட்டுக்குள் வந்திருப்பதால், நேரடி நிகழ்வாக நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பு விடுத்து இருந்தார். இதை ஏற்று பிரதமர் மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். 

இதற்காக நாளை பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்கா செல்கிறார். ஜோகன்னஸ்பர்க்கில் 3 நாட்கள் தங்கியிருக்கும் பிரதமர் மோடி, முதலில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, பிரிக்ஸ் அமைப்பு சார்பில் நடைபெற்று வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் திட்டங்களை வகுக்க வேண்டிய துறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டை தொடர்ந்து அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளிலும் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார் 

குறிப்பாக, பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர் அல்லாத நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கும் பிரிக்ஸ் - ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்கிறார். அத்துடன், இந்த மாநாட்டுக்காக ஜோகன்னஸ்பர்க் வரும் பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் மாநாட்டுக்கு இடையிடையே தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அந்த வகையில் தென்ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் அதிபர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

தென்ஆப்பிரிக்காவில் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 25-ம் தேதி கிரீஸ் நாட்டுக்கு செல்கிறார். கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸ் அழைப்பின் பேரில் செல்லும் பிரதமர் மோடி, அங்கும் பல்வேறு நிகழ்வுகளில்பங்கேற்கிறார். இதில் முக்கியமாக அந்த நாட்டு பிரதமருடன் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்துகிறார்.  40 ஆண்டுகளில் முதல்முறை இந்திய பிரதமர் ஒருவர் கிரீஸ் நாட்டுக்கு செல்வது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறை ஆகும். 

Trending News

Latest News

You May Like