1. Home
  2. தமிழ்நாடு

முதல்வர்களிடம் மோடி என்ன சொன்னார்? வெளியான முக்கிய தகவல்கள்!!

முதல்வர்களிடம் மோடி என்ன சொன்னார்? வெளியான முக்கிய தகவல்கள்!!


இனி நாட்டில் மேலும் ஊரடங்கு இருக்காது என்றும், ஊரடங்கை மேலும் நீட்டிக்காமல் தகர்த்தெறியும் கட்டம் தற்போது தொடங்கியுள்ளது என்று தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நிலைமை குறித்து முதலமைச்சர்களுடன் கானொலி காட்சி சந்திப்பின் போது பிரதமர் மோடி அடுத்த கட்ட சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனைத்து முதலமைச்சர்களிடமும் கலந்து ஆலோசனை செய்யாமல் , பிரதமர் ஊரடங்கை நீடிப்பு அல்லது தகர்க்கும் முடிவை எடுக்க மாட்டார் என்று மக்களுக்கு அவர் அளித்த பதிலை சந்திரசேகர் ராவ் மேற்கோள் காட்டினார். 


பிரதமர் மோடி பேசுகையில், 
1. இனி புதிதாக நாட்டில் எங்குமே, எந்த ஊரடங்கும் இருக்காது. 
2. அதிகளவில் பொருளாதார முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வழிவகுப்பட்டும்.
3. தொழில்துறைகளிலும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் வகையிலும் அதிகளவில் முதலீடுகள் கொண்டு வருவதில் அக்கறை எடுக்கப்படும்.
4. கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும்.
5. உதவி மையங்களும், அழைப்புகளும் உதவி செய்வதற்காக இருக்க வேண்டும். உதவ முடியாமல் போவதற்காக உதவி மையங்கள் இருக்கக்கூடாது.
6. ஆரோக்யா சேது செயலியை அதிகளவில் பயன்படுத்தி வரும் மாநிலங்களில், கொரோனா தொற்று அதிகளவில் பரவாமல், கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
7. நாம் ஆரோக்யா சேது செயலி பயன்பாட்டாளர்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
8. அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை ஒருங்கிணைந்து குழு ஒன்றை உருவாக்க வேண்டும்.  இந்த மருத்துவர் குழு, நோயாளிகளுக்கு ஆலோசனைகளைச் சொல்லி, சரியான தகவல்களையும், விழிப்புணர்வுகளையும் செய்வார்கள். 
9. இளைஞர்களை ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும்.
10. அன்லாக் 1.0 இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அன்லாக் 2.0 பற்றி என்ன செய்வது என்பது குறித்து நாம் அனைவரும் விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மேற்கோளிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், கோவிட் -19 மாநிலத்தில் கட்டுப்பாட்டில் இருப்பதாக ராவ் பிரதமரிடம் கூறினார். மையம் மற்றும் மாநிலங்கள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக வைரஸுக்கு எதிராக ஒரு தீர்க்கமான வெற்றி கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

newstm.in


 

Trending News

Latest News

You May Like