1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடி அறிவித்த புதிய வைப்சைட் !! எதற்கு ?

பிரதமர் மோடி அறிவித்த புதிய வைப்சைட் !! எதற்கு ?


கொரோனா காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு மே 3ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26,384 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுக்க 826 பேர் இந்த கொரோனாவால் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி கொரோனா தடுப்பு குறித்து மன்கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் கொரோனாவுக்கு எதிரான போர் களத்தில் முன்னணி வீரர்கள். பிரதமர் மோடி தனது பேச்சில், தேசத்தில் ஒருவர் கூட பசியால் வாடக்கூடாது என்பதை விவசாயிகள் உறுதி செய்துள்ளனர்.

இரவு பகல் பாராமல் விவசாயிகள் உழைத்து வருகிறார்கள். நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்வது விவசாயிகள் மட்டும்தான். அதேபோல் இன்னும் சிலர் தங்கள் வீட்டில் இருக்கும் நபர்களிடம் வாடகை கூட வாங்குவது இல்லை. கொரோனா தடுப்பிற்காக மக்கள் இப்படி ஆர்வமாக பணிகளை செய்கிறார்கள். நாட்டு மக்கள் தங்களால் ஆன பங்களிப்பை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குகின்றனர்.

கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் ராணுவ வீரர்களை போல போராடுகிறார்கள் அரசின் ஒவ்வொரு துறைகளும் 24 மணிநேரமும் மக்களுக்கு உதவுவதற்காக செயல்பட்டு வருகிறது. நாம் கொரோனாவோடு சேர்த்து வறுமைக்கு எதிராகவும் போராடி வருகிரம் அரசும், மக்களும் சேர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.

மக்கள் இந்த கொரோனா தடுப்பு பணிகளில் நிறைய முன்னெடுப்புகளை செய்து உள்ளனர். http://covidwarriors.gov.in இணையதளம் மூலம் கொரோனா தடுப்பு பணிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதில் கொரோனா தொடர்பான அனைத்து விதமான விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும். கொரோனா தொடர்பான அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் இதில் தீர்வு பெற முடியும்.

இந்த தளம் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.நாடு முழுக்க உள்ள 130 கோடி மக்களையும் நான் மதிக்கிறேன். அவர்களின் பணிகளை, தியாகத்தை நான் தலை வணங்குகிறேன் , என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like