குடியரசுத்தலைவர், துணைக் குடியரசுத்தலைவர் தமிழகம் வருகை!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் அத்தி வரதரை தரிசிக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகிற 12ம் தேதி சென்னை வருகிறார்.
 | 

குடியரசுத்தலைவர், துணைக் குடியரசுத்தலைவர் தமிழகம் வருகை!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் அத்தி வரதரை தரிசிக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகிற 12ம் தேதி சென்னை வருகிறார்.

ஜூலை 12ம் தேதி பிற்பகல் 12 மணியளவில் தனி விமானம் மூலமாக சென்னை வரும் அவர் அங்கிருந்து பிற்பகல் 3 மணி அளவில் காஞ்சிபுரம் செல்கிறார். பின்னர் வரதராஜப் பெருமாள் கோவில் அத்தி வரதரை தரிசித்திவிட்டு மாலை 4 மணிக்கு மேலாக சென்னை வருகிறார். அன்று இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்துவிட்டு மறுநாள் 13ம் தேதி மாலை தனி விமானம் மூலமாக டெல்லி திரும்புகிறார். இதற்கிடையே சென்னையில் ஒரு சில நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோன்று துணைக் குடியரசுத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு, வருகிற 13ம் தேதி பிற்பகல் சென்னை வருகிறார். 13, 14 தேதிகளில் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அவர் 15ஆம் தேதி காலை டெல்லி திரும்புகிறார்.

குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் தமிழகம் வருவதையொட்டி பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP