திருமணத்திற்கு தடையாக இருந்த குழந்தை.. விலையை பேஸ்புக்கில் அறிவித்த கர்ப்பிணி..!

திருமணத்திற்கு தடையாக இருந்த குழந்தை.. விலையை பேஸ்புக்கில் அறிவித்த கர்ப்பிணி..!

திருமணத்திற்கு தடையாக இருந்த குழந்தை.. விலையை பேஸ்புக்கில் அறிவித்த கர்ப்பிணி..!
X

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் தனது வயிற்றிலிருக்கும் குழந்தையை பேஸ்புக் மூலம் விற்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது- 

அவுரங்காபாத்தில்  ரஞ்சங்கான் ஷென்பூஞ்சி பகுதியில் சிவசங்கர் தாகடே(30) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் சில வாரங்களுக்கு முன்புதான் தனது கணவரை விட்டு பிரிந்தார். ஆனால், தன் மைத்துனர் ஒருவரை மறுமணம் செய்து கொள்ள திட்டம்போட்டுவிட்டார்.

அதற்கு முன்னதாகவே அவர் கர்ப்பம் ஆனதால் வயிற்றில் இருக்கும் குழந்தையை என்ன செய்வது என தாகடேவும், அவரை திருமணம் செய்ய உள்ள மைனத்துனரும் யோசித்தனர். 

இந்த நிலையில் தான் தாகாடே அந்த வயிற்றிலிருக்கும் குழந்தையை விற்க முடிவு செய்தார். இதனால்  தனத பேஸ்புக் பக்கத்தில் குழந்தை வேண்டுவோர் தொடர்புகொள்ள விளம்பரம் கொடுத்தார். 

இந்த விஷயம் பற்றி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை தகவல் பெற்று, காவல்துறையினரிடம் புகாரளித்தது. அதன்படி, சிறார் நீதிச் சட்டத்தின் விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

newstm.in

Next Story
Share it