பெரிய நடிகர்களின் ஆதரவு இருந்தும் நடிகர் சங்கத் தேர்தலில் பிரகாஷ்ராஜ் தோல்வி !!!

 | 

தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்யவதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ்- அவரை எதிர்த்து மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு என்ற நடிகர் களத்தில் இறங்கினார். வேறு சிலர் போட்டியிட்டாலும் இவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 

தேர்தல் முடிந்ததும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் விஷ்ணு மஞ்சு வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தோல்வியடைந்தார்.

MAAElections

இது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிரகாஷ்ராஜ்க்கு பெரிய பிரபலங்களின் ஆதரவு இருந்தும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு முன்பாக பிரகாஷ்ராஜ்க்கு எதிராக பல்வேறு வகைகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதாவது, பிரகாஷ்ராஜ் கர்நாடகாவைச் சேர்ந்தவர். அவர் தெலுங்கு நடிகர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு தேர்வாககூடாது என சிலர் நேரடியாகவே இதனை விமர்சித்தனர்.

MAAElections

எனினும் பிரகாஷ்ராஜ் தலைமையில் நிர்வாகப் பதவிகளுக்கு போட்டியிடும் அணி வலிமையாகவே இருந்தது. நாகர்ஜூனா, சிரஞ்சீவி, பவன் கல்யாண் போன்ற பெரிய நடிகர்களின் ஆதரவு இருந்தும் பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP