பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட வறுமை... ஆட்டோ ஓட்டும் நடிகை!

பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட வறுமை... ஆட்டோ ஓட்டும் நடிகை!

பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட வறுமை... ஆட்டோ ஓட்டும் நடிகை!
X

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் நடிகை ஒருவர் ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வருகிறார்.

கேரளாவை சேர்ந்த மஞ்சு என்ற நாடக நடிகை கடந்த 15 ஆண்டுகளாக மேடை நாடகங்களில் நடித்து வாழ்க்கை நடத்தி வந்தார். அப்போது சேமிப்பு பணம் மற்றும் கேரள மக்களின் கலைக்கழகத்திடம் கடனும் பெற்று ஒரு ஆட்டோவை வாங்கினார். நாடகம் முடிந்து வீட்டுக்கு திரும்புவதற்கு அந்த ஆட்டோ பயன்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பொதுமுடக்கம் அவரது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் ஆட்டோவையே வாழ்வாதார சாதனமாக மாற்றினார். அவர் ஆட்டோ ஓட்டி தனது வாழ்வாதாரத்தை சரி செய்துள்ளார். மஞ்சுவின் இந்த செயலுக்கு கேரள மக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it